Published Date: September 24, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்றும் மதுரை மாநகராட்சி 56 வது வார்டுக்கு உட்பட்ட அழகரடி, சின்னச்சாமி பிள்ளை தெரு,சண்முகப்பிள்ளை தெரு, விவேகானந்தா ரோடு, கரிமேடு உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.மேலும் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வுப் பணியின் போது மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், உதவி ஆணையாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் முத்து, உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள், தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Media: Dinakaran